
26Jul2019
COMPLETED: கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினுடைய பிரான்ஸ் நாட்டின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. சிவஞானம் ரங்கன் (ரங்கா)அவர்கள், கிளிநொச்சி காந்தி நிலைய சிறுவர்களின் எதிர்கால நலன் கருதி முதற் கட்டமாக, அங்குள்ள 21 சிறுவர்களுக்கும் புதிய வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்து, அதில் தலா 5000 ரூபா வீதம் வைப்பிலிட்டுள்ளார். இவருடைய இந்த தன்னலமற்ற உதவிக்காக பாராட்டுக்கள், இந்த உதவி திட்டத்தில் கிளி அமைப்பைசேர்ந்த மகாலிங்கம் விஜய் அவர்கள் இன்று ( 26 July 2019) தலா Rs 2,500 படி காந்திநிலய ஒவ்வொரு மாணவர்களினதும் வைப்புக்கணக்கில் வைப்பிலிட்டுள்ளார்.
இத்திட்டம் மூலம் இச் சிறுவர்கள் எதிர்காலத்தில் நிலையத்திலிருந்து வெளியேறி சமூகத்துடன் இணையும் போது அவர்களின் மேற்படிப்புக்கு அல்லது அவர்களின் எதிர்காலத்திற்கு நிச்சயம் கைகொடுக்கும்.









