கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தனது வருடாந்த கலைநிகழ்வான “தென்னங்கீற்று 2016″ இணை இவ்வாண்டு பிரித்தானிய கொவன்றி மண்ணில் நடாத்தியிருந்தது. பல்சுவை நிகழ்வாக நடைபெற்ற இன் நிகழ்ச்சியில் கொவன்றி பிரதேச தமிழ் மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். கொவன்றி தமிழ் பாடசாலை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் சுமார் 39 நிகழ்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் தலைவர் வைத்தியக் கலாநிதி சதானந்தன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்க தலைவர் திரு கந்தையா அரியரத்னம் பிரதம
Nakshatra Hall
Nakshatra Hall, Snakey Lane, Feltham, United Kingdom
கிளிநொச்சி மக்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் Jan 14ம் திகதி 2017 லண்டனில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் 99 துவிச்சக்கரவண்டிகள் கிளிநொச்சி மாவட்டம்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. சிகரம் அமைப்பின் ஆதரவுடன் நடைபெறும் இந்த நிகழ்வு சிறப்புற அமைய அனைவரையும் அழைக்கின்றோம். வெற்றிகரமாக நடைபெற்ற நிகழ்வில் இருந்து சில பதிவுகள் :
இலண்டனில் 2017ம் ஆண்டு தை 14ம் திகதி நடைபெற்ற கிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் மூலம் பெறப்பட்ட சுமார் 202 துவிச்சக்கர வண்டிகளை கிளிநொச்சியில் வைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
Byron Hall
Byron Hall, Christchurch Ave,, Harrow, United Kingdom
கிளி மக்கள் அமைப்பின் இவ்வாண்டுக்கான மாபெரும் ஒன்றுகூடல் கடந்த 2ம் திகதி மார்ச் மாதம் இலண்டனில் நடைபெற்றது. இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சலாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ் தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், தாயக பாடசாலைகளின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என நிகழ்வினை வலுப்படுத்தியிருந்தனர். முள்ளிவாய்க்கால் வைத்தியர் சத்தியமூர்த்தி பிரதம விருந்தினராக கிளிநொச்சியிலிருந்து கலந்துகொண்டு
கிளி பீப்பிள் அமைப்பின் MISSION FOR EDUCATION சிறப்பு நிகழ்ச்சி நிரலின் கீழ் ஜூன் மாதம் 5ம், 6ம் மற்றும் 8ம் திகதிகளில் கிளிநொச்சி பிரதேசத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் நிறுவனங்களுடன் எமது பிரதிநிதிகள் பிரதேச கல்வி மேம்பாடு பற்றிய கலந்துரையாடலை நடாத்தியிருந்தனர். 05/06/2019 - கிளிநொச்சி கல்வி அபிவிருத்தி செயலணி (KEDF) கிளி பீப்பிள் அமைப்பின் திட்டங்களான 2018ம் ஆண்டு வெள்ள நிவாரண பணிகள் மற்றும் 4 மாலை நேரக்கல்வி நிலையங்கள் என எம்முடன் பங்குகொண்டு சிறப்பான
கிளி மக்கள் அமைப்பின் 1023 துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு 08/06/2019 அன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. பிரதான நிகழ்வைத்தொடர்ந்து இதுவரை 8 கட்டங்களாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி கல்வி அபிவிருத்தி செயலணி, கல்வி வளர்ச்சி அறக்கட்டளை, கிளி அதிபர்கள் சங்கம் மற்றும் கிளி மத்திய கல்லூரி சமூகம் இந்த நிகழ்வினை கிளி மக்கள் அமைப்புடன் தாயகத்தில் செயல்படுத்தியிருந்தார்கள். - 1023 துவிச்சக்கர வண்டிகளும் பின்வருமாறு ஏனைய மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டன. கிளிநொச்சி - 653 முல்லைத்தீவு
*KILI PEOPLE CHARITY WALK 2020* தொடர்பாக கிளி மக்கள் அமைப்புக்கும் பிரித்தானியாவில் உள்ள கிளிநொச்சி பிரதேச பழைய மாணவர் சங்கங்களுக்கும் இடையே நேற்று ஒரு கலந்துரையாடல் இலண்டனில் நடைபெற்றது. இதில் கிளி பீப்பிள் மற்றும் கிளி மத்திய கல்லூரி, கிளி இந்துக்கல்லூரி, வட்டக்கச்சி மத்திய கல்லூரி, பரந்தன் இந்து மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மேற்கு அ த க பாடசாலை, உருத்திரபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள்
Kili People organising Inter School Football Tournament in Kilinochchi to encourage all students for healthy education through sports. KILI PEOPLE PREMIER LEAGUE
KILI PEOPLE CHARITY WALK 2020 கிளி மக்கள் அமைப்பின் நிதிசேகரிக்கும் நடைப்பயணம் காற்று வீசி குதூகலிக்கும் பெருவெளி நிலங்கள். விரிந்து கிடக்கும் பச்சை வயல் விரிப்புக்கள். வரம்புகளின் ஓரம் எமது கால்கள் நடந்த காலம். நின்று நிலைத்து இன்றும் இனிக்கும் நினைவுகள். காத்துக்கிடக்கும் மனிதர்களின் தேசம். கரம் நீட்டி தூக்கிவிட இதயம் துடிக்கும் புலம் பெயர் உறவுகள். வாருங்கள் உறவுகளே ஒருநாள் நடப்போம். கிளிநொச்சி பிரதேசமெங்கும் கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்குவோம் MISSION FOR EDUCATION 303