கிளி / மின்தகன மயானம் அடிக்கல் நாட்டுவிழா காலம்- 07/01/2022 ( வெள்ளிக்கிழமை) நேரம்- காலை 11.00 மணி இடம் - திருநகர் மயான மண்டபம் “ இது ஒரு பொதுமக்கள் நிகழ்வு அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள்” கிளிமக்கள் அமைப்பு & கிளி மயான அபிவிருத்திக்குழு.
உழவர் விழா 2022 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை கலை நிகழ்வுகளும் விருது வழங்கும் நிகழ்வும் மண்ணின் மைந்தன் விருது 2020ம் ஆண்டுக்கான விருதைப் பெறுகின்றார் கல்வியாளர் திரு நா சோதிநாதன் ஓய்வு நிலை அதிபர் - கிளி மத்திய கல்லூரி KILI PEOPLE கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினால் 2018ம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் “மண்ணின் மைந்தன்” விருது வழங்கப்படுகின்றது. கிளிநொச்சிப் பிரதேச மக்களின் கல்வி, மருத்துவ, பொருளாதார, விவசாய மற்றும் சமூக நல வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன்
முள்ளிவாய்க்கால் வைத்தியரும் யாழ் வைத்தியசாலை பணிப்பாளருமான "மண்ணின் மைந்தன்" வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் கிளி மக்கள் அமைப்பின் கல்வித்திட்டத்துக்காக ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாந்து நாட்டில் நடைபெற உள்ள எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கின்றார். உங்கள் ஆதரவினை அவருக்கு வழங்கி கீழ் உள்ள இணைப்பில் உங்கள் சிறு பங்களிப்பிணை செலுத்தி வாழ்த்துகளையும் பகிர வேண்டுகின்றோம்... https://www.totalgiving.co.uk/mypage/dr_t_sathiyamoorthy நன்றி KILI PEOPLE
எதிர்வரும் மே மாதம் 27ம் 28ம் திகதிகளில் ஸ்கொட்லாந்து நாட்டின் எடின்பரோவில் நடைபெற உள்ள உலகப்பிரசித்தி பெற்ற மரதன் திருவிழாவில் சுமார் 35,000 மரதன் ஓட்டவீரர்கள் 400 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்காக கலந்துகொள்ள இருக்கின்றார்கள். கிளி பீப்பிள் தொண்டு நிறுவனத்தினை எடின்பரோ மரதன் விழாக்குழுவானது (Edinburgh Marathon Festival-2023 EMF ) அங்கீகரிக்கப்பட்ட Charity யாக முதன்முதலில் ஒரு தமிழர்களின் அமைப்பினை ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாண்டு பெருமளவான தமிழ் மரதன் ஓட்ட வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றார்கள்.
சர்வதேச Edinburgh Marathon Festival-2024 இல் உலகின் எந்த மூலையில் இருந்தும் எவரும் எமது kilipeople charity ஊடாக வந்து பங்கு பெற்றலாம். Kilipeople charity ஆனது EMF மரதன் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட charity இக்கான பதிவைப்பெற்றுள்ள சுமார் 400 சர்வதேச charity களில் ஒன்றாக இருக்கும் முதல் தமிழ் charity kilipeople charity என்பது தமிழர்கள் எமக்கு பெருமையே. உலகெங்கும் இருந்து சுமார் 35,000 மரதன் ஓட்டவீரர்கள் சுமார் 400 charity களை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை
கிளி மக்கள் அமைப்பின் 2024ம் ஆண்டுக்கான மாபெரும் ஒன்றுகூடல். இந்த நிகழ்வில் 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கிளி மக்கள் அமைப்பின் விருதுகள் வழங்கப்பட உள்ளது. 2022ம் ஆண்டுக்கான "மண்ணின் மகள்" விருது எழுத்தாளர் தாமரைச்செல்விக்கும் 2023ம் ஆண்டுக்கான "மண்ணின் மைந்தன்" விருது வைத்தியர் விக்னேஸ்வரனுக்கும் வழங்கப்பட உள்ளது. எம்மண்ணுக்கு பெருமை சேர்க்கும் இம் மாந்தர்களுக்கு மாண்பேற்றும் நிகழ்வில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கின்றது கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு - KILI People