KILI PEOPLE மாணவர் சங்கங்களுக்கும் இடையே கலந்துரையாடல்
- at 5:00 pm - 9:00 pm
*KILI PEOPLE CHARITY WALK 2020* தொடர்பாக கிளி மக்கள் அமைப்புக்கும் பிரித்தானியாவில் உள்ள கிளிநொச்சி பிரதேச பழைய மாணவர் சங்கங்களுக்கும் இடையே நேற்று [08/03/2020] ஒரு கலந்துரையாடல் இலண்டனில் நடைபெற்றது.
இதில் கிளி பீப்பிள் மற்றும் கிளி மத்திய கல்லூரி, கிளி இந்துக்கல்லூரி, வட்டக்கச்சி மத்திய கல்லூரி, பரந்தன் இந்து மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மேற்கு அ த க பாடசாலை, உருத்திரபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கிளி பீப்பிள் அமைப்பினால் நடைபெறப் போகும் CHARITY WALK நிகழ்வில் பழைய மாணவர் சங்கங்கள் கலந்துகொண்டு தமது அமைப்பு சார்ந்து நிதி சேகரிக்க உள்ளனர். ஒவ்வொரு பழைய மாணவர் சங்கங்களினாலும் சேகரிக்கப்படும் நிதி அவர்களுடைய திட்டங்களுக்கு வழங்கப்படுமென கிளி பீப்பிள் முன்மொழிந்த ஆலோசனையை ஏற்று அனைவரும் ஒன்றிணைந்ததாக இந்த நிதி சேகரிக்கும் நடைப்பயணம் நடைபெற உள்ளது.
கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன். உங்களது ஆதரவினை அனைவருக்கும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். [படங்கள்]
நன்றி | KILI PEOPLE