
மாணவர்களுக்கு 1023 துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு – 2019
- at 8:00 am - 5:00 pm
மன்னார் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 50 துவிச்சக்கர வண்டிகளை அடம்பன் மாகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. லட்சுமி கரங்கள் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தின் மடுப்பிரதேச வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் பொதுப்பணி அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் லட்சுமி கரங்கள் பிரதிநிதிகளுடன் கிளி பீப்பிள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
14/07/2019 : கட்டம் – 9 :காலை 9 மணி முள்ளிவாய்க்கால் மேற்கு ஜுனியர் உயர் பாடசாலை
கிளி மக்கள் அமைப்பின் 1001 துவிச்சக்கர வண்டிகள் திட்டத்தின் கீழ் 9 வது கட்டமாக முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கு 50 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட உள்ளது. இம்மாதம் 14ம் திகதி முள்ளிவாய்க்கால் மேற்கு ஜுனியர் உயர் பாடசாலையில் இந்த நிகழ்வு காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
முள்ளிவாய்க்கால், வள்ளிபுனம், உடையார்கட்டு, கைவேலி, தேவிபுரம், புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு போன்ற பிரதேசங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
23/07/2019 – கட்டம் – 10 நெடுந்தீவு பாடசாலை
கிளி மக்கள் அமைப்பின் 1001 துவிச்சக்கர வண்டிகள் திட்டத்தின் கீழ் 10 வது கட்டமாக யாழ் மாவட்ட மாணவர்களுக்கு சிறப்பு கொடையாளிகளினால் 10 துவிச்சக்கர வண்டிகள் இம்மாதம் 23ம் திகதி நெடுந்தீவு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்படுள்ளது .
24/07/2019 : கட்டம் – 11 – நவக்கிரி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை
கிளி மக்கள் அமைப்பின் 1001 துவிச்சக்கர வண்டிகள் திட்டத்தின் கீழ் 11 வது கட்டமாக யாழ் மாவட்ட நவக்கிரி, அச்சுவேலி, ஆவரங்கால், வாதரவத்தை, குட்டிப்புலம் போன்ற பிரதேசங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 50 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது. 14/07/19 அன்று நவக்கிரி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் இந்த நிகழ்வு காலை 9 மணிக்கு நடைபெற்றது.
24/07/2019 – கட்டம் 12 – திருகோணமலை மூதூர் பாரதி வித்தியாலயம்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிளிவெட்டி பிரதேச மாணவர்களுக்கு 50 துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
24/07/2019 – கட்டம் 13 – மட்டக்களப்பு பனிச்சங்கேணி மகாவித்தியாலயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, பனிச்சங்கேணி மாணவர்களுக்கு 50 துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
24/07/2019 – கட்டம் 14 – அம்பாறை கண்ணகிபுரம் வித்தியாலயம்
அம்பாறை மாவட்டத்தின் கண்ணகிபுரம் பிரதேச மாணவர்களுக்கு 50 துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது
24/07/2019 – கட்டம் 15 – வவுனியா நொச்சிமோட்டை வித்தியாலயம்
வவுனியா மாவட்டத்தின் நொச்சிமோட்டை பிரதேச மாணவர்களுக்கு 60 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
24/07/2019 – இறுதிகட்டம் 16 – கிளிநொச்சி பரந்தன் சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபம்
கிளிநொச்சி மாவட்டத்தின் கந்தபுரம் பாடசாலை மாணவர்களுக்கு இறுதியாக 5 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
———————————————————————————————————————-
















































































































































–





























































































