சேவை பாராட்டு நிகழ்வு
- at 4:00 pm - 6:00 pm
சேவை பாராட்டு நிகழ்வு
நெருக்கடிகாலத்தில் சேவை செய்த வைத்தியர் அவர்கள் லண்டன் வருகை தந்திருந்தார்.
கடந்த போர் சூழலில் முள்ளிவாய்க்கால் வரை தனது சேவையை எம் மக்களுக்கு வழங்கிய கிளிநொச்சி பிரதேச வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களுக்கு பிரித்தானிய மக்கள் சார்பாக முஐடுஐ PநுழுPடுநு இனால் கடந்த 03ஃ07ஃ212 அன்று லண்டனில் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.
முள்ளிவாய்கால் இடப்பெயர்வின் போது மூன்று லட்சம் மக்களையாவது முழுமையாக காத்துவந்த மருத்துவ குழுவின் முதுகெலும்பாக செயற்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் மைந்தனும் முதன்மை வைத்திய அதிகாரியுமான டாக்டர் சத்தியமூர்த்தி அவர்களை கௌரவிக்கும் முகமாகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட கல்வி வளர்ச்சி, மருத்துவ தேவைகள் மற்றும் அதன் அபிவிருத்திகள் பற்றியுமான ஒரு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வை லண்டனில் (03 .07 .2012 ) நடாத்தியது.
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினரால்(KILIPEOPLE) இம்மாதம் 21 ம் திகதி ஹரோ (HARROW) ZOROASTRIAN HALL (442 Alexandra Avenue, Middlesex, Harrow, HA2 9TL) என்னும் இடத்தில் கவிக்குயில் P. சுசிலா, சிமக்குரலோன் T. M. சௌந்தரராஜன் அவர்களின் இளைய வாரிசு தேனிசை திலகம் T.M.S.செல்வகுமார் மற்றும் பல இசை கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் இசை நிகழ்வான ” நெஞ்சம் மறப்பதில்லை-2012 ” நிகழ்ச்சி பற்றியும் கலந்துரையாடியதுடன் அதன் மூலம் சேகரிக்கப்படும் நிதியானது கிளிநொச்சிஇமுல்லைத்தீவு மாவட்ட கல்வி மற்றும் மாற்று திறனாளிகளின் சுய தொழில் வாய்ப்பு திட்டத்திற்காக அன்பளிப்பு செய்யப்படும் எனவும் மேற்படி கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டது.
அந்த இசை நிகழ்வின் முதலாவது நுழைவுச்சீட்டு டாக்கடர் சத்தியமூர்த்தி அவர்களால் வைபவ ரீதியாக பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினர் அவரது முள்ளிவாய்கால் சேவையை பாராட்டி புலம்பெயர் வாழ் தமிழர்கள் சார்பாக மடிக்கணணி(LAPTOP) ஒன்றையும் வழங்கி தமது நன்றியையும் பாராட்டையும் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் பல்வேறு தொண்டர் அமைப்புகளும், பல புலம்பெயர் வாழ் தமிழர்களும் பல வைத்தியர்களும், கலந்து கொண்டனர்.