
கற்பகா தொழிநுட்ப கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் வைபவம்
- at 12:00 am - 11:59 pm
கிளி/ கற்பகா தொழில் நுட்ப கல்லூரியானது , லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபையினால் திருவாளர் கோபால கிருஷ்ணன் அவர்களின் வழி நடத்தலின் மூலம் கட்டடம் நிருமாணிக்கப்பட்டு ஆரம்பத்தில் 10 கணணிகளுடன் கூடிய கற்பகா கணணி நிலையமாக வைகாசி மாதம் 2012 இல் திருவாளர் கோபால கிருஷ்ணன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு பின்னர் 2012 ஆவணி மாதமளவில் முதலாவது கணணி பயிற்சி வகுப்பு தற்போதைய வட மாகாண கல்வி அமைச்சரான திரு குருகுலராஜா அவர்களினால் அபோது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தற்போது இது கணணி பயிற்சி வகுப்புகள் , ஆங்கில பயிற்சி வகுப்புகள் , கேக் ஐசிங் வகுப்புகள் போன்ற வகுப்புகள் உட்பட பல்வேறு தொழில் நுட்ப வகுப்புகளை உள்ளடக்கிய கிளி /கற்பகா தொழில் நுட்ப கல்லூரியாக கிளிநொச்சி மாவட்டத்திலே உயர்வு பெற்று உள்ளது.
இதுவரை சுமார் 300 இக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இலவசமாக தமது தொழில் நுட்டப கல்வி தகமைகளை பூர்த்தி செய்து பல்வேறு துறைகளிலும் முன்னேறி உள்ளனர்.
போரினால் பாதிக்கபட்டவர்கள் , மாற்று வலு திறனாளிகள், கணவனை இழந்தவர்கள் , பாடசாலை மாணவர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,அதிபர்கள் என பலதரப்பட்டவர்கள் இந்த இலவச தொழிநுட்ப கல்லூரியின் மாணவர்களாக பயன் பெற்று வருகின்றனர். தற்பொழுது சுமார் 70 மாணவர்கள் கணணி வகுப்பிலும் , சுமார் 60 மாணவர்கள் ஆங்கில வகுப்பிலும் தலா 30 மாணவர்கள் தையல் மற்றும் கேக் ஐசிங் வகுப்பிலும் சம காலத்தில் வருகை தருகின்றனர்.
கிளி/ கற்பகா தொழில் நுட்ப கல்லூரியானது ஒரு குறுகிய காலத்தில் கூடுதல் வளர்ச்சி பெற்று கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதி கூடிய மாணவர்களை தன்னகத்தே கொண்டுள்ள முதல் தர தொழில் நுட்ப கல்லூரி என்று சொன்னால் அது மிகையாகாது.
மேற்படி கிளி/ கற்பகா தொழில் நுட்ப கல்லூரியின் முதலாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 20.11.2013 அன்று கிளிநொச்சியில் நடாத்தப்பட்டது – இதில் திருவாளர் கோபால கிருஷ்ணன் அவர்களும் நேரில் சென்று சிறப்பித்துள்ளமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது.