
உழவர் விழா – 2013
- at 5:30 pm - 11:00 pm
அனைவருக்கும் வணக்கம்
இவ்வாண்டின் இறுதி நாட்களை கடந்து கொண்டு இருக்கின்றோம். தை பிறக்கப்போகுது, பொங்கலும் வரப்போகின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களது நம்பிக்கை. இந்த நம்பிக்கை வீண் போகாதென்பதை மனதில் வைப்போம்.
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் (KILI PEOPLE ) உழவர் விழா எதிர்வரும் 9 ம் திகதி, மாசி மாதம் 2013 நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். கிளிநொச்சி மண்ணின் வாசம் நிறைந்த இந்த விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கடந்த ஆண்டு சிறப்புற அமைய ஆதரவு தந்த உங்கள் அனைவரிடமும் நன்றி கலந்த அழைப்பை விடுக்கின்றோம். இத்துடன் விழா அழைப்பிதல் இணைக்கப்பட்டுள்ளது.
நீண்டு விரிந்து கிடக்கின்ற – அந்த
வயல் வெளிகளின் நினைவுகளுடன் …….
வாருங்கள் – பொங்கல்
எங்கள் தாய் மண்ணின் அடையாளமல்லவா ……















