கிளிநொச்சி மாவட்ட கல்வி, சமூக மற்றும் மனிதநேய பணிகளுக்காக கிளிமக்கள் அமைப்பினால் 2020 ம் ஆண்டுக்கான “மண்ணின் மைந்தன்” விருது தை 16ம் திகதி 2022ம் ஆண்டு மெய்நிகர் அமர்வாக நடைபெற்ற உழவர் விழாவில் திரு நாகலிங்கம் சோதிநாதன் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
1958ம் ஆண்டு படித்த வாலிபர் திட்டத்தின் மூலம் கிளிநொச்சியில் கால்பதித்த இவர் கல்வி வளர்ச்சிக்காக தனது அயராத பங்களிப்பிணை பல்வேறு தளங்களிலிருந்து வழங்கியுள்ளார். ஆசிரியராகவும், அதிபராகவும் கொத்தணி அதிபராகவும் கடமையாற்றிய இவர் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் அதிபராக கடமையாற்றி ஓவுபெற்றுள்ளார். கிளிநொச்சி பிரதேச மாணவர்களுக்கு பல்கலைக்கழக கல்விக்கான நம்பிக்கையை மாணவர்களின் மனங்களில் விதைத்த பேராசான்
1938 ம் ஆண்டு சண்டிலிப்பாயில் பிறந்த இவர் சிறுவயதில் சிங்கப்பூரிலும் பின்னர் தாயகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்து கல்வியால் உயர்ந்ததுடன் சிறந்த கல்வியாளராக கிளிநொச்சிப் பிரதேச வரலாற்றில் தனது பங்களிப்பினை மிகவும் ஆழமாக வழங்கியுள்ளார்.
கிளிநொச்சிப் பிரதேசத்தின் பல்வேறு சமூக அமைப்புக்களுடனும் ஆன்மீக நிறுவனங்களுடனும் நெருக்கமாக தனது சேவையினை தொடர்ச்சியாக நல்கியுள்ளார்.
கல்வி மற்றும் சமூகம் சார்ந்த நீண்ட பணிகளுக்காக திரு நாகலிங்கம் சோதிநாதன் அவர்களுக்கு KILI PEOPLE இன் 2020ம் ஆண்டுக்கான மண்ணின் மைந்தன் விருது வழங்குவதில் பெருமையடைகின்றோம்.