நெஞ்சம் மறப்பதில்லை – 2012
- at 5:30 pm - 11:00 pm
KILI PEOPLE மகிழ்ச்சியுடன் நடாத்தும் இன்னிசை மாலை நெஞ்சம் மறப்பதில்லை – 2012, இவ்வாண்டின் ஆடி மாதம் 21ம் நாள் நடைபெற உள்ளது. தென்னிந்திய பிரபல பாடகர்கள் P. சுசிலா மற்றும் T. M. சௌந்தரராஜன் மகன் T. M. S. செல்வகுமார்…..இவர்களுடன் இளம் கலைஞர்கள் இணைந்து வழங்கும் இன்னிசை மாலை.
இடம்: Zoroastrian Hall, 442, Alexandra Avenue, Harrow, Middlesex, HA2 9TL
(Opposite to Rayners Lane Tube Station)
காலம்: 21.07.2012 – 5 .30 pm till 11.00 pm
கிளிநொச்சி பிரதேச மக்களின் மறு வாழ்வினை உறுதிப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட எம் அமைப்பு பல செயல் திட்டங்களை இவ் மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்றது. பிரித்தானியாவில் வாழும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் ஒன்றிணைந்த செயல்பாடான நிதி சேகரிக்கும் இவ் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அழைக்கின்றோம்.
Updated on 31/12/2012
அனைவருக்கும் வணக்கம்,
கடந்த ஆடி மாதம் 21 ம் திகதி 2012, KILI PEOPLE இனால் நடாத்திய “நெஞ்சம் மறப்பதில்லை – 2012” நிகழ்வில் எதிபாராத விதமாக பிரபல தென் இந்திய பாடகர்கள் Pசுசீலா மற்றும் T M S செல்வகுமார் ஆகியோர் பங்குபற்ற முடியாத சந்தர்ப்பத்திலும், நாம் திட்டமிட்ட படி இசை நிகழ்வினை உங்கள் பேராதரவுடன் நடாத்தி முடித்துள்ளோம்.
நாம் இலவசமாக இவ் நிகழ்வினை ஏனைய கலைஞர்கள் உடன் நடாத்த திட்ட மிட்ட போதும், சில பார்வையாளர்களே அனுமதிச்சீட்டு பணத்தினை மீளப்பெற்றுள்ளனர். ஏனையோர் பெருமனம் கொண்டு தாயாக மக்களின் நலனையே மனதில் வைத்து ஆதரவினை வழங்கினார்கள்.
இவ் முயற்சியின் மூலம் திரட்டிய நிதியை எமது தாயகத்தில் பல வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தியுள்ளோம். நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு KILI PEOPLE நன்றிகளை தெரிவிக்கின்றது.
இத்துடன் இவ் இசை நிகழ்ச்சியின் வரவு செலவு கணக்கையும் இணைத்துள்ளோம்.
Income:
Sponsors – £6600.00
Ticket Sales – £2210.00
Till Collection – £ 408.80
£9218.80
Expenses:
Hall Rent – £2100.00
Printing Material – £ 543.00
Advert – £ 600.00
Drama fee – £ 300.00
Other Expenses – £ 182.00
Ticket Refund – £ 695.00 £4420.00
SURPLUS £4798.80
Uncollected Sponsors – £1975.00
(If you need further information, please do not hesitate to contact on kilipeople2011@gmail.com