
14Feb2013
COMPLETED:
2012 ம் ஆண்டு இறுதியில் ( மாரி காலம் ) பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் அனர்த்தத்தால் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தஞ்சமடைந்த கிளிநொச்சி மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கபட்டுள்ளது.
பருவகாலத்தின் சீற்றத்தால் எதிர்பாராத அனர்த்தங்களை சந்தித்த கிளிநொச்சி மக்களுக்கு உடனடி உதவிகள் வழங்கப்பட்டன. போரின் பின்னர் நிலையான வாழ்வை அமைக்கும் முன்னர் இயற்கையும் அழிவினை கொடுத்தது. இருப்பிடங்கள் வெள்ளத்தால் அள்ளுண்டு போக உயர் நிலம் தேடி தஞ்சம் அடைந்தவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சுமார் ரூபா 200,000.00 பெறுமதியான பொருட்கள் கிளிநொச்சி செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.







