கிளிநொச்சி பிரதேச கல்வி நிலையை கவனத்தில் கொண்டு கிளி பீப்பிள் அமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் மாலைநேர கற்றல் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான மருதநகர், பன்னங்கண்டி ஆகிய பிரதேசங்களை வெள்ள நிவாரண மீதமுள்ள நிதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. எமது பொது நிதியிலிருந்து இந்நிலையங்கள் தொடர்ந்து நடாத்தப்பட உள்ளது. கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை (KEDT ) நிர்வாகத்தில் இந்த நிலையங்கள் இயங்குகின்றன.
கிளிநொச்சி கல்வி அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில் முழங்காவில் மகாவித்தியாலயம், வேரவில் பாடசாலை, நாச்சிகுடா பாடசாலை மற்றும் இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கீழ்வரும் நிலையங்கள் எம்மால் நடாத்தப்படுகின்றது;
- மருதநகர் – ஏற்பாடு KEDT
- பன்னங்கண்டி – ஏற்பாடு KEDT
- 22/02/2019 – முழங்காவில் மகா வித்தியாலயம் – ஏற்பாடு KEDF
- 22/02/2019 – நாச்சிக்குடா பாடசாலை – ஏற்பாடு KEDF
- 15/03/2019 – இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை – ஏற்பாடு KEDF
- வேரவில் பாடசாலை – ஏற்பாடு KDEF
புகைப்படங்கள் – மருதநகர் நிலையம்;
புகைப்படங்கள் – பன்னங்கண்டி நிலையம்;
புகைப்படங்கள் – இராமநாதபுரம் கிழக்கு நிலையம்;
புகைப்படங்கள் – வேரவில் நிலையம்;