
COMPLETED: இயற்கை உரம் மூலம் விவசாயம் செய்யும் நோக்குடன் பரந்தனில் இயங்கும் பசுந்தாரகை விவசாய மகளீர் அமைப்பு மூலிகை கலந்த அரிசி மாவினை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகின்றது. தற்போது திறக்கப்பட்ட தொழிற்கூடத்துக்கு மேலதிக மின்வசதி செய்வதற்கும் தமது தயாரிப்புக்களை காட்சிப்படுத்தி வைப்பதற்கான அலுமாரி என்பனவற்றுக்காகவும் விஜயன் மற்றும் சுரேஷ் ஆகியோரின் அனுசரணையில் கிளி மக்கள் அமைப்பினால் ரூபா 50,000 வழங்கப்பட்டது. ஆணிமாதம் 12ம் திகதி இந்த நிதி திருமதி சுசீலாதேவி பத்மநாபனால் கையளிக்கப்பட்டது.
பசுந்தாரகை விவசாய மகளீர் அமைப்பு தற்போது குறிஞ்சா மா, வல்லாரை மா, முருங்கை இலை மா, குரக்கன் மா, மற்றும் மிளகாய்த்தூள் தயாரிப்பதுடன் இயற்கை விவசாயம் மூலம் அன்னாசி போன்ற பயிச்செய்கைகளையும் முயற்சி செய்துவருகின்றது.
பரந்தன் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இவ் அமைப்பில் இணைந்து தமது வீடுகளில் இயற்கை விவசாய முயற்சி செய்வதும் இவ் அமைப்பினூடாக அவற்றை சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதும் பாராட்டுக்குரியவை.
பசுந்தாரகை விவசாய மகளீர் அமைப்புக்கு கிளி மக்கள் அமைப்பு [கிளி பீப்பிள்] பாராட்டுக்களை தெரிவிக்கின்றது.
இவ் உணவுப்பொருட்களை பெற விருப்புடையோர் எம்முடன் தொடர்புகொள்ளவும், அறிமுகப்படுத்தி விடுகின்றோம்.
நன்றி – KILI PEOPLE