
13Aug2011
COMPLETED:
புதிய மற்றும் பாவித்த நூல்கள் புலம் பெயர் நாடுகளில் சேகரித்து தாயகத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும் நூல் நிலையங்களுக்கும் வழங்கும் திட்டம் கடந்த ஆவணி மாதம் 2011 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்வியில் ஏற்பட்ட இடைவெளியை அகற்றும் நோக்குடனும் எமது மாணவர்களின் பரந்து பட்ட வாசிப்பு திறனை அதிகரிக்கவும் இத் திட்டம் உதவுகின்றது.
தமிழ் மொழி மட்டுமல்லாது ஆங்கில மொழி மூலமான நூல்களையும் நாம் சேகரித்துள்ளோம். எமது தொண்டர்கள் மூலமாகவும், லண்டனில் உள்ள பெரும்பாலான தமிழ் பாடசாலைகள் மூலமாகவும் இவ் நூல்கள் எமக்கு கிடைத்துள்ளன.
முதல் கட்டமாக ஆரம்பக்கல்வி பாடசாலைகளுக்கும் நூல் நிலையங்களுக்கும் எம்மால் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது .
இத்திட்டத்துக்கு உதவி செய்த அனைத்து நல உள்ளங்களுக்கும் KILI PEOPLE நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது.
குறிப்பு :
இத்திட்டத்துக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம். உங்களிடம் உள்ள சிறு நூல்களை கூட தயவு செய்து விரையம் செய்யாதீர்கள். அவை எம் சந்ததியின் அறிவினை வளர்க்கும் தீப் பொறிகள்….
தொடர்பு : email : kilipeople2011@gmail.com














