
COMPLETED:
வருடாவருடம் உலகளாவிய ரீதியில் நடாத்தப்படும் சர்வதேச மாற்று திறநாளிகள் நாள் இன்று (03.12.2014) KILIPEOPLE அனுசரணையில் கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது, இதில் சுமார் 1000 கும் மேற்பட்ட வன்னி மாவட்ட மாற்று திறநாளிகள் கலந்து சிறப்பித்தனர், இந்நிகழ்வு மாற்று திறநாளிகளின் கலைத்திறமைகளை வெளிக்காட்டும் ஒரு களமாக அமைந்ததுடன், கருத்து பரிமாறல் தளமாகவும் அமைந்தது. மாற்று திறநாளிகள் குடும்பங்களுக்கு சிற்றுண்டிகள், மற்றும் மதிய உணவுகள் வழங்கப்பட்டதுடன் அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் அதற்கான தீர்வுகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சம்மேளன தலைவர் சிவமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையினை சம்மேளனத்தில் செயலாளர்விஜயலட்சுமி வழங்கினார்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீனிவாசன் கலந்து சிறப்பித்தார். இந்த பிரமாண்ட நிகழ்விற்கு இம்முறை வேறு சில தொண்டர் நிறுவனங்களும் தங்களது நிதி பங்களிப்பை செய்து இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.