கிளி மக்கள் அமைப்பின் ஒன்றுகூடல் தொடர்பாகவும் 2019ம் ஆண்டுக்கான “மண்ணின் மைந்தன்” விருது முள்ளிவாய்க்கால் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு வழங்கப்பட்டது தொடர்பாகவும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு 07/03/2019 அன்று வெளியிட்ட ஊடக செய்தி.
07th MARCH 2019 / LONDON
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஊடகச் செய்தி
கிளி மக்களின் மாபெரும் ஒன்றுகூடல் – இலண்டன் 2019
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் 2019 ம் ஆண்டிற்கான “மண்ணின் மைந்தன்” விருது முள்ளிவாய்க்கால் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிளி மக்கள் அமைப்பின் இவ்வாண்டுக்கான மாபெரும் ஒன்றுகூடல் கடந்த 2ம் திகதி மார்ச் மாதம் இலண்டனில் நடைபெற்றது. இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சலாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ் தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், தாயக பாடசாலைகளின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என நிகழ்வினை வலுப்படுத்தியிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் வைத்தியர் சத்தியமூர்த்தி பிரதம விருந்தினராக கிளிநொச்சியிலிருந்து கலந்துகொண்டு கிளி மக்கள் ஒன்றுகூடலை சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக லண்டன் கின்ஸ்டன் நகரபிதா தயா தயாளன், ஹரோ முன்னாள் நகரபிதா சுரேஷ் கிருஷ்ணா, ஹரோ கவுன்சிலர் சசிகலா, சட்டன் கவுன்சிலர் பரம் நந்தா, கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் திருமதி சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த காலங்களில் KILI PEOPLE அமைப்புடன் இணைந்து செயல்பட்ட தொண்டு நிறுவனங்களான London King’s College தமிழ் சங்கம், Lotus Caring Hands UK, சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் சங்கம், Path To The Future, S.C.O.T, யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், யாழ்ப்பாண மருத்துவ பீட பழைய மாணவர் சர்வதேச சங்கம் ஆகிய அமைப்புகளிலிருந்தும் பிரதிநிதிகள் விசேட விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கிளி மக்கள் அமைப்பின் கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிஸ் நாடுகளின் இணைப்பாளர்கள் பிரேத்தியமாக லண்டன் வருகை தந்திருந்தனர்.
இந்த நிகழ்வுக்கு பிரதான அனுசரணையை SPOT ON MONEY யும், ABI RETAILS, BLUE OCEAN, HYPER EVENTS, CHOICE, PARTY IN STYLE, RATNAM MEDICAL, FOCUSCIA, AGS, PORTMANS, LIFELINE, SUGUN, MAAYAM, YUPP TV, RAINBOW, EIKARD, CARLTON LEISURE, NACHIYAR EVENTS, FRANCO GROUPS, VANAKKAM LONDON ஆகியோரும் அனுசரணையை வழங்கியிருந்தனர்.
500 துவிச்சக்கர வண்டிகளை சேகரித்து கிளிநொச்சி மற்றும் வட கிழக்கில் உள்ள பாடசாலைக்கு செல்ல சிரமப்படும் மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்துடன் இந்த ஒன்றுகூடல் ஒழுங்குசெய்யப்பட்டது. புலம்பெயர் தமிழர்களின் வலுவான ஆதரவுடன் நிகழ்வு ஆரம்பிக்கின்றபோது 548 துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றிருந்தது. நிகழ்வின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் சுமார் 600 துவிச்சக்கர வண்டிகளுக்கு மேல் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. எதிர்வரும் ஆனிமாதம் தாயகத்தில் மாணவர்களுக்கு எம்மால் இவை வழங்கப்பட இருக்கின்றன.
KILI PEOPLE அமைப்பின் 2019ம் ஆண்டுக்கான “மண்ணின் மைந்தன்” விருது வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களுக்கு அன்றைய தினம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கிளிநொச்சியில் பிறந்து வளர்ந்து அந்த மண்ணிலே வைத்தியராக தனது அர்ப்பணிப்பான சேவையை செய்தமைக்காகவும் கிளிநொச்சியில் கல்விக்கான வளர்ச்சியில் அவர் ஆற்றிய காத்திரமான பங்களிப்புக்காகவும் கிளி மக்கள் அமைப்பு இந்த விருதை இவருக்கு வழங்கியுள்ளது. இக்கட்டான சூழலில் சேவையாற்றி முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்டவர் அன்றைய தினம் அரங்கம் கூடி வாழ்த்தி நிக்க “மண்ணின் மைந்தன்” வைத்தியர் சத்தியமூர்த்தி என பிரகடனப்படுத்தப்பட்டார்.
சிகரம் இசைக்குழுவின் இனிய இசையில் கிளிநொச்சி மண்ணின் பாடகர்கள் ஐபிசி தமிழ் தங்கக்குரல் மிருதுளா, மற்றும் ரம்யா, சரண்யா ஆகியோர் சுவிஸ்லாந்தில் இருந்து வருகைதர இலண்டன் பாடகர்கள், விக்கி, ஷான், சிவா, ஷனுஷா ஆகியோருடன் இளம் பாடகர்கள் நடன கலைஞர்களும் பல இசைக்கலைஞர்கள் கலந்து சிறப்பான இசையை வழங்கியிருந்தனர்.
இந்த நிகழ்வு சிறப்புற அமைய உதவியவர்களுக்கும், துவிச்சக்கர வண்டிகளின் திட்டத்துக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கும், அனுசரணை வழங்கியோருக்கும், நிகழ்வுக்காக பின்நின்று உதவிய அனைவருக்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தமது நன்றிகளை இந்த ஊடக செய்தி மூலம் தெரிவித்துக்கொள்கின்றது.
செயலாளர்
INFO@KILIPEOPLE.ORG