CURRENT:
ஒரு காலத்தில் கிளிநொச்சி மண்ணில் தலை நிமிர்ந்து நின்ற பொது நூலகம் போரின் சுவடுகளில் மறைந்து மீண்டபோதும் இன்று 5400 நூல்களுடன் மட்டுமே இயங்கி வருகின்றது. வளர்ந்து வரும் ஒரு பிரதேசமாக இருந்து கல்விசார் மக்களை கணிசமாக உருவாக்கிய பெருமையுடன் இருந்த இந்த நூலகம் மீண்டும் பொலிவு பெறவேண்டும். வன்னி மண்ணில் தலை நிமிர்ந்த ஒரு அறிவுக்களஞ்சியமாக அது மீண்டும் நிறுவப்பட வேண்டும். என்பது எங்கள் எல்லோரது விருப்பமுமாகும்.
புலம்பெயர் கிளிநொச்சி மக்களை இணைத்து இலண்டனை தளமாகக்கொண்டு இயங்கும் “கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு” ஆகிய நாங்கள், எமக்குரிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து இத்திட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளோம்.
கிளிநொச்சி பொது நூலக மீள் எழுச்சி நோக்கிய பயணத்தில், 25,000 நூல்களை சேகரித்து வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இத்திட்டத்தில் பல நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் இணைந்துள்ளமை எமக்கு மிகப்பெரிய பலத்தினை தந்துள்ளது. ஆதரவு வழங்கும் அனைவருக்கும் எமது நன்றிகள்.
சேகரிக்கப்பட உள்ள நூல் வகைகள் (புதிய மற்றும் பாவித்த) :
· அகராதிகள் – தமிழ் மற்றும் பிற மொழிகள்
· பொது அறிவு – தமிழ் ஆங்கிலம்
· வரலாற்று, அரசியல், புவியியல் – தமிழ் , ஆங்கிலம்
· புனைகதைகள் – தமிழ், ஆங்கிலம்
· இலக்கிய நூல்கள் – தமிழ், ஆங்கிலம்
· பல்கலைக்கழக மற்றும் தொழில்சார் பாட நூல்கள்
· தகவல் தொழில்நுட்பம் – தமிழ், ஆங்கிலம்
· மழலைகள் நூல்கள் – தமிழ் ஆங்கிலம்
குறிப்பு
· ஆண்டு 1 முதல் ஆண்டு 12 வரையுள்ள பாட நூல்களை புலம்பெயர் நாடுகளில் தவிர்க்கவும்.
· முடிந்தவரை நல்ல நிலையில் உள்ள நூல்களாக இருப்பது நல்லது.
· KILI PEOPLE அமைப்பு மூலமாகவோ அல்லது இணைந்து கொண்ட ஏனைய அமைப்புகள் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
நேரடியாக அனுப்ப விரும்புவோர் நேரடி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.