COMPLETED: கிளி பீப்பிள் அமைப்பினால் கிளிநொச்சி ஐயனார்புரம் பாடசாலை கரப்பந்து அணியினருக்கான சீருடை மற்றும் பந்துகள் வழங்கப்பட்டன. இலண்டன் அபி ரீடைல் நிறுவனம் சார்பாக கிளி பீப்பிள் நிறுவனர்களில் ஒருவருமான கிருஷ்ணபிள்ளை விஜயராஜா அவர்களின் அனுசரணையில் இப்பொருட்கள் நேற்றையதினம் 27/07/2019 அன்று வழங்கப்பட்டன.
கிளி மக்கள் அமைப்பின் பொருளாளர் ரவி கணேஷலிங்கம், செயற்குழு உறுப்பினர் விஜய் மகாலிங்கம் அவரது தாயார் திருமதி யோகேஸ்வரி அம்மையார் மற்றும் களநிலை அலுவலகர் சந்திரமோகன் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
கிளி பீப்பிள் அமைப்பினால் MISSION FOR EDUCATION எனும் நிகழ்ச்சி நிரலின் கீழ் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் முதலாவது திட்டத்தினை கிருஷ்ணபிள்ளை விஜயராஜாவின் அனுசரணையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.