எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் தொடர்ந்த சமூகப்பணிக்காகவும், ஈழத் தமிழரின் கடந்தகால வரலாறுகளைப் பதிவுசெய்யும் அவரது எழுத்துப்பணிக்காகவும் கிளி மக்கள் அமைப்பு அவரை 14/12/2023 நடைபெற்ற கலந்துரையாடலில் மதிப்பளித்திருந்தார்கள்.
கிளி மக்கள் அமைப்பின் தலைவர் துறைவனும் பொருளாளர் கலாரானி அவர்களும் அந்த கௌரவத்தை வழங்கியிருந்தனர்.
அன்றைய தினம் கலந்துகொண்ட ஆர்வலர்களின் பங்களிப்பில் சுமார் இலங்கை ரூபா 550,000 மன்னார் மாந்தை மேற்கு “WE CAN” மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கு வழங்கப்பட்டது. மன்னார் நலன்புரிச் சங்க தலைவர் ஜேம்ஸ், சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் சங்கரசீலன் மற்றும் கிளி மக்கள் அமைப்பின் பொருளாளர் கலாரானி ஆகியோர் வழங்கியிருந்தனர்.