CURRENT: “இயற்கை” வீட்டுத்தோட்டம். சேதன விவசாய முறையை வீடுகளில் ஊக்கப்படுத்தி வீட்டுத்தோட்டத்தை செய்வதன் மூலம் ஆரோக்கியமான மரக்கறிகளையும் பழவகைகளையும் உற்பத்தி செய்தல்.
தமது தேவையை தாமே உற்பத்தி செய்யும் திட்டம். மேல் உள்ள ஏழு தொண்டு நிறுவனங்கள் இணைந்து பரந்தனில் “இயற்கை” வீட்டுத்தோட்ட முயற்சியை “எமது உணவை நாமே உற்பத்தி செய்வோம்” எனும்தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றன. கிளி பீப்பிள் அமைப்பு இவர்களுடன் இணைந்து இத்திட்ட த்தில் பயணிக்கின்றது. தெரிவு செய்யப்படும் 100 பயனாளிகளுக்கும் மூலப்பொருட்களை வழங்குவதுடன் சுமார் ஆறு மாதங்களுக்கு ஆலோசனை வழங்கி கண்காணித்து பூரண அறிவினை பெற்றுக்கொள்ள இத்திட்டம் வழிவகுக்கும்.
More details on – https://www.facebook.com/groups/naturehomegarden