
28Nov2011
COMPLETED:
கிளிநொச்சியில் உள்ள அனைத்துப் பொது நூலகங்களிலும் இணைய நூலகத்தினை உருவாக்கி அதனைப் பொது மக்களின் கணனிப்பயன்பாட்டுக்கு நூலகத்தின் மேற்பார்வையில் வழங்கும் திட்டம்.
வளர்ந்து வரும் கணனி தொழில்நுட்பத்துக்கு ஏற்ப எமது தாயக மக்களும் கணனி அறிவையும் அதன் பயன்பாட்டையும் பெற வேண்டும் என்ற எமது நோக்கம் செயல் வடிவம் பெறத்தொடங்கியது.
முதல் கட்டமாக கிளிநொச்சி நகர சபையின் கீழ் இயங்கும் நூலகத்தில் திறந்தது வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5 கணனிகள் இணைக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் பாவனைக்கு ஏற்ப பின்னர் கணனிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
பாவனையாளர்களில் முதலில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.