Projects

  • 99 துவிச்சக்கரவண்டிகள் கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்குPosted On : 2016-12-27

    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பாடசாலைக்கு பயணம் செல்ல சிரமப்படும் மாணவர்களை இனம்கண்டு இத்துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட உள்ளது.

  • கிளிநொச்சி பொது நூலக மீள் எழுச்சி நோக்கிய பயணம் | 25,000 நூல்கள் சேகரிப்பு திட்டம்Posted On : 2014-10-30

    கிளிநொச்சி பொது நூலக மீள் எழுச்சி நோக்கிய பயணத்தில், 25,000 நூல்களை சேகரித்து வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

  • பொருண்மிய மேம்பாடு - பசுமைத் திட்டம் - ECONOMICAL DEVELOPMENT - Green Project : Distribution of Young Coconut TreesPosted On : 2013-02-14

    2016 ம் ஆண்டுக்குள் 200,016 தென்னம்கன்றுகள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் திட்டம். கடந்த 2013, மாசி மாதம் 6 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் கிளிநொச்சியில் உள்ள சுமார் 300 பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட உள்ளது.

  • செயற்கைக்கால் சிகிச்சை நிலையம் - ARTIFICIAL LIMB CLINICPosted On : 2012-09-10

    கால்களை இழந்தோர் செயற்கைக்கால்கள் பெற்ற போதிலும் முறையான பராமரிப்பும் உரிய வைத்திய ஆலோசனைகளும் இன்றித் தவிக்கிறார்கள். இவர்களுக்கான வைத்திய ஆலோசனைகள் வழங்கும் நிலையம்.

  • கற்பகா கணனி கற்கை நிலையம் - KATPAKA COMPUTER TRAINING CENTREPosted On : 2012-03-20

    கிளிநொச்சியில் இலவச கணனி கல்வி வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இன் நிறுவனம் லண்டன் கற்பக விநாயகர் கோவில் நிதியில் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ரூபா 2,000,000.00 செலவில் கடந்த 2012 ம் ஆண்டு MARCH மாதம் திறந்து வைக்கப்பட்டது.

  • மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் முயற்சிகள் - SELF-EMPLOYMENT FOR DISABLESPosted On : 2012-02-15

    போரினால் பாதிக்கப்பட்ட மீள் குடியேற்றத்தில் வாழ்வாதாரத்துக்கு இடர்களை எதிர் நோக்கும் மாற்றுத்திறநாளிகளுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப சுய தொழில் அமைத்துக் கொடுத்தல்.

  • கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளைக்கான ஆதரவு - SUPPORT TO KILINOCHCHI EDUCATION DEVELOPMENT TRUST (KEDT)Posted On : 2011-12-18

    கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற கல்வி வளர்ச்சி அறக்கட்டளை ஊடாக தெரிவுசெய்யும் மாணவர்களுக்கு கடன் வழங்குவதற்கான நிதி நன்கொடை.

  • சர்வதேச மாற்று திறநாளிகள் நாள் - 2015Posted On : 2014-12-04

    வருடாவருடம் உலகளாவிய ரீதியில் நடாத்தப்படும் சர்வதேச மாற்று திறநாளிகள் நாள் இன்று (03.12.2014) KILIPEOPLE அனுசரணையில் கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது , இதில் சுமார் 1000 இக்கும் மேற்பட்ட வன்னி மாவட்ட மாற்று திறநாளிகள் கலந்து சிறப்பித்தனர்

  • மலையக மண்சரிவு பேரனர்த்தம் 2014Posted On : 2014-11-01

    மலையக பதுளை மாவட்ட கொஸ்லாந்தஇ மீரியபெத்த பிரதேசத்தில் நிலச்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு மற்றும் வெற்றிவானொலி இணைந்து நிவாரணப் நிதி சேகரிப்பும் ஆடைகள் சேகரிப்பும்.

  • மகாதேவா சிறுவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்Posted On : 2014-10-29

    ளிநொச்சியில் இயங்கிவரும் மகாதேவா ஆசிரம சிறுவர் இல்லத்தில் தீபாவளி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலண்டனில் உள்ள திரு திருமதி மகேஸ்வரன், பவித்ரா பைரவி குடும்பத்தினரின் அனுசரணையில் மேற்படி தீபாவளி நிகழ்வு சிறப்புற நடைப்பெற்றது.

  • கல்மடுநகர் கிராம மாணவர்களுக்கான ஆரம்ப கல்விPosted On : 2014-10-24

    கிளிநொச்சியின் கிழக்கு நோக்கிய ஒரு கிராமமான கல்மடுநகர் கிராம மாணவர்களுக்கு ஆங்கில தமிழ் கணித வகுப்புகள் நடாத்துதல்.

  • கல்மடுநகர் கிராம மாணவர்களுக்கான கணணி கற்கை நிலையம்Posted On : 2014-10-24

    லண்டன் கற்பக விநாயகர் ஆலைய நிதியின் கீழ் கிளிநொச்சியில் இரண்டாவது கணணி கற்கை நிலையம் கல்மடுநகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • முதியோர் மருத்துவ முகாம்Posted On : 2014-10-24

    உருத்திரபுரம் முதியோர்களுக்கு மருத்துவ முகாம் நடாத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போரினால் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு வைத்திய ஆலோசனைக்கும் மன ஆற்றுப்படுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏனைய கிராமங்களுக்கும் விஸ்தரிக்கப்படும்.

  • கிளிநொச்சி இலவச மருத்துவ மையம்Posted On : 2014-10-23

    கிளிநொச்சி புதிய சந்தைக்கு அருகாமையில் அமைந்துள்ள கற்பகா இலவச மருத்துவ மையத்தில் வார இறுதியில் இலவச மருத்துவ சேவைமூலம் நோயாளர்களுக்கு மேலதிக மருத்துவ வசதிகளும் விசேட ஆலோசனைகளும். எதிகாலத்தில் விசேட ஆய்வு கூட பரிசோதனைகளும் மேட்கொள்ளப்படும்.

  • உயர்தர மாணவர்களுக்கு மீட்டல் வகுப்புகள் - 2013Posted On : 2013-06-21

    கிளிநொச்சி பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு மீட்டல் வகுப்புகளை ஆண்டுதோறும் KILI PEOPLE ஒழுங்குசெய்வது வழக்கம். இவ் ஆண்டுக்கான மீட்டல் வகுப்புகள் கடந்த 19ம் திகதி ஜூன் மாதம் தொடக்கி தொடர்ந்து 8 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

  • கிளிநொச்சி மாவட்ட கல்வி மேம்பாட்டு ஆய்வுPosted On : 2013-06-20

    கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மட்டத்தில் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கோடு. இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் பின்பற்றப்படும் சிறப்பான திட்டங்களை கிளிநொச்சியிலும் அறிமுகப்படுத்துவதற்கு ஆலோசனைகளையும் அனுபவப்பகிர்வைப் பெறும் திட்டம்.

  • போக்குவரத்து விதிமுறைக்கான விழிப்புணர்வு கருத்தரங்குPosted On : 2013-06-19

    கிளிநொச்சியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் KILI PEOPLE இனால் நடாத்துதல்.

  • தட்டுவன்கொட்டி பாடசாலை மானவர்களுக்கு உதவிPosted On : 2013-06-18

    கிளிநொச்சி தட்டுவன்கொட்டி மகா வித்தியாலயத்துக்கு KILI PEOPLE இன் ஒழுங்கமைப்பில் மாணவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

  • ஒரு வார உணவு - காந்தி நிலையம் சிறுவர் இல்லம்Posted On : 2013-03-28

    கிளிநொச்சியில் இயங்கி வரும் காந்தி நிலையம் சிறுவர் இல்லத்தில் வசிக்கின்ற சுமார் 35 சிறுவர்களுக்கு Kili People முடிந்தவரை உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது. இவர்களுக்கான ஒரு வாரத்துக்கான உணவு வழங்குவோம் வாருங்கள்.

  • ஒரு மாத உணவு - அன்பின் சகோதரிகள் இல்லம் : TRIEST-HOMEPosted On : 2013-03-28

    கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இயங்கி வரும் அன்பின் சகோதரிகள் இல்லத்தில் வசிக்கும் சுமார் 12 சிறுமிகளுக்கு Kili People இன் உணவுக்கான உதவிகள். யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து நிக்கும் இச் சிறுமிகளின் எதிர்காலத்துக்கு பாசக்கரம் நீட்டுவோம்.

  • வெள்ள நிவாரணம் - FLOOD APPEAL - KilinochchiPosted On : 2013-02-14

    2012 ம் ஆண்டு இறுதியில் ( மாரி காலம் ) பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் அனர்த்தத்தால் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தஞ்சமடைந்த கிளிநொச்சி மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கபட்டுள்ளது.

  • வெள்ள நிவாரணம் - FLOOD APPEAL - BatticaloaPosted On : 2012-12-24

    2012 ம் ஆண்டு இறுதியில் ( மாரி காலம் ) பெரும் மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தஞ்சமடைந்த மட்டக்களப்பு மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கபட்டுள்ளது.

  • கல்விக்கான ஒளி - LIGHT FOR EDUCATIONPosted On : 2012-12-04

    கிளிநொச்சியில் இயங்கும் மஹாதேவா ஆசிரம சிறுவர் இல்லத்திற்கு சூரிய சக்தி மின் கலங்கள் ரூபா 368,000.00 செலவில் ஒரு பகுதி கட்டடத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

  • மீட்டல் வகுப்புகள் - REVISION CLASSESPosted On : 2012-08-12

    உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு க. பொ. த. (சா / த) பரீட்சை க்கான மீட்டல் வகுப்புகள் கிளிநொச்சி மாவட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய உறுப்பினர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது.

  • அப்பியாச நூல்கள் - EXERCISE BOOKSPosted On : 2012-04-25

    மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாச நூல்கள் வழங்கப்பட்டன. சுமார் 10,000 பிரதிகள் 2012 ம் ஆண்டில் வழங்கப்பட்டன.

  • துவிச்சக்கர வண்டிகள் - LIFE SUPPORT : BICYCLES - 50Posted On : 2012-01-24

    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 50 குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

  • உருத்திரபுரம் சனசமுக நிலையம்- COMMUNITY CENTREPosted On : 2012-01-07

    உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் நடாத்துகின்ற சனசமுக நிலையம் கடந்த போரினால் முற்றாக அழிவுற்ற நிலையில் KILI PEOPLE இனால் மீள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

  • வெள்ள நிவாரணம் - FLOOD APPEAL - 2011Posted On : 2011-12-23

    2011 ம் ஆண்டு இறுதியில் ( மாரி காலம் ) பெரும் மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தஞ்சமடைந்த கிளிநொச்சி மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கபட்டுள்ளது.

  • ஒரு நாள் உணவு - மஹா தேவா ஆசிரம சிறுவர் இல்லம் - MAHADEVA ACHIRAMA CHILDREN HOMEPosted On : 2011-11-27

    கிளிநொச்சி ஜெயந்தி நகரில் இயங்கி வரும் மஹா தேவா சிறுவர் இல்லத்தில் உள்ள சுமார் 300 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு ஒரு நாள் உணவினை வழங்கும் திட்டம் 2011 ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • இணைய நூலகம் - COMPUTER LIBRARYPosted On : 2011-11-27

    கிளிநொச்சியில் உள்ள அனைத்துப் பொது நூலகங்களிலும் இணைய நூலகத்தினை உருவாக்கி அதனைப் பொது மக்களின் கணனிப்பயன்பாட்டுக்கு நூலகத்தின் மேற்பார்வையில் வழங்கும் திட்டம்.

  • இராமநாதபுரம் அன்பின் சகோதரிகள் இல்லம் - Ramanaathapuram Anpin SakotharikalPosted On : 2011-08-15

    கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இயங்கிவரும் அன்பின் சகோதரிகள் இல்லத்துக்கு எமது KILI PEOPLE சார்பாக ரூபா 10,000.00 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

  • நோயாளிகளுக்கான ஆதரவு - PATIENTS SUPPORTPosted On : 2011-08-13

    கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வரும் வறிய நோயாளிகளுக்கு உடனடித்தேவைகளுக்கான பணக்கொடுப்பனவு. மேலதிக சிகிச்சைக்காக பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் நோயாளிகளின் நலன் கருதி KILI PEOPLE மாதாந்தம் ரூபா 10000.00 நிதியினை ஒதுக்கியுள்ளது.

  • நூல்கள் வழங்குதல் - BOOKS COLLECTIONPosted On : 2011-08-13

    புதிய மற்றும் பாவித்த நூல்கள் புலம் பெயர் நாடுகளில் சேகரித்து தாயகத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும் நூல் நிலையங்களுக்கும் வழங்கும் திட்டம் கடந்த ஆவணி மாதம் 2011 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • சிறுவர்களுக்கான ஆதரவு - CHILDREN SUPPORTPosted On : 2011-08-02

    கிளிநொச்சி மாவட் ட மக்கள் அமைப்பின் முதலாவது உதவித்திட்டமானது, கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பாரிய அங்கவீனமுற்ற ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று சிறுவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு.

  • தையல் பயிற்சி நிலையங்கள்Posted On : 2013-03-29

    கிளிநொச்சி மாவட்டம் எங்கும் கிராம மட்டங்களில் தையல் பயிற்சி நிலையங்களை அமைத்தல். பயிற்சி முடித்த பெண்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்குவதற்காக சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தல்.

  • தும்புத் தொழிற்சாலைகள்Posted On : 2013-03-29

    கிளிநொச்சி பிரதேசத்தின் பின்தங்கிய கிராமங்களில் சிறுகைத்தொழிலாக தும்புத் தொழிற்சாலைகளை உருவாக்குதல். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் குறைந்தது சுமார் 20 பேருக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்துதல்.

  • SPIRULINA FARMPosted On : 2013-02-19

    Spirulina is micro-alga that can be consumed by human and animals. It is usually taken by human as a Nutritional Supplement.

  • Vocational Training CentrePosted On : 2013-02-06

    KILI PEOPLE making necessary arrangement to establish a Vocational Training Centre. We expect to provide vocational education to all people. It will reduce the un-employment problem and give more confident on their life.

  • Computer LibraryPosted On : 2012-02-05

    KILI PEOPLE is making all arrangement to set up a Computer Library for Public Library in Poonakari & Karachchi Divisions. This is the part of existing project. KILI PEOPLE already organised in Kilinochchi public library.

  • Medical CampsPosted On : 2011-11-27

    Selected rural villages and arrange the medical camps on week ends. Doctors from Kilinochchi District General Hospital offered their support to this projects.