சிறுவர்களுக்கான ஆதரவு - CHILDREN SUPPORTPosted on: 2011-08-02

சிறுவர்களுக்கான ஆதரவு 

கிளிநொச்சி மாவட் ட மக்கள் அமைப்பின் முதலாவது உதவித்திட்டமானது, கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பாரிய அங்கவீனமுற்ற ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று சிறுவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு.

கொடிய யுத்தத்தின் தீச்சுவாலையில் பாதிக்கப்பட்ட எண்ணற்ற சிறார்களில் இவர்களும் உள்ளார்கள். இறுதி யுத்தம் இவர்களின் தாய் தந்தை இருவரையும் பலி கொண்டுவிட்டது. இவ் மூன்று சகோதர்களும் கடும் பாதிப்புக்குட்பட்டுள்ளார்கள்.

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மனித நேயம் உள்ள சிலரால் பராமரிக்கப்படும் இவர்களுக்கு KILI  PEOPLE நிறுவனம் மாதாந்த உதவிப்பணமாக ரூபா 7500 ஒரு வருடத்துக்கு கொடுக்க முன் வந்ததுள்ளது. 


Project Value : 7500.00
Project Start : 2011-08-02
Project End : 2012-08-02