வெள்ள நிவாரணம் - FLOOD APPEAL - BatticaloaPosted on: 2012-12-24

வெள்ள நிவாரணம் 

2012 ம் ஆண்டு இறுதியில் ( மாரி காலம் ) பெரும் மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தஞ்சமடைந்த மட்டக்களப்பு மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கபட்டுள்ளது.

பருவகாலத்தின் சீற்றத்தால் எதிர்பாராத அனர்த்தங்களை சந்தித்த மட்டக்களப்பின் தாழ்ந்த பிரதேசங்களில் குடியிருந்த மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். போரின் பின்னர் நிலையான வாழ்வை அமைக்கும் முன்னர் இயற்கையும் அழிவினை கொடுத்தது. இருப்பிடங்கள் வெள்ளத்தால் அள்ளுண்டு போக உயர் நிலம் தேடி தஞ்சம் அடைந்தவர்களுக்கு உலர் உணவும்  அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன.

 சுமார் ரூபா 200,000.00 பெறுமதியான பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர்  பேரவை மூலம் வழங்கப்பட்டுள்ளது. 

Project Value : 200000.00
Project Start : 2012-12-24
Project End : 2012-12-24