செயற்கைக்கால் சிகிச்சை நிலையம் - ARTIFICIAL LIMB CLINICPosted on: 2012-09-10

செயற்கைக்கால் சிகிச்சை நிலையம் 

கால்களை இழந்தோர் செயற்கைக்கால்கள் பெற்ற போதிலும் முறையான பராமரிப்பும் உரிய வைத்திய ஆலோசனைகளும் இன்றித் தவிக்கிறார்கள். இவர்களுக்கான வைத்திய ஆலோசனைகள்  வழங்கும் நிலையம்.  

யாழ்ப்பாணம் ஜெயப்பூர் செயற்கைக்கால் நிறுவனத்தின் துறை சார் வல்லுனர்களால் இச் சிகிச்சை நிலையம் நடாத்தப்படுகின்றது. இத் திட்டத்துக்கு கிளிநொச்சியில் இயங்கி வரும்  திருமதி ம. லோஜினி மற்றும் வைத்திய கலாநிதி ப. மதியழகன் ஆகியோரின் குடும்ப நிறுவனமான SAS வைத்தியசாலை இலவசமாக இட வசதியும் நிர்வாகமும் செய்து தந்துள்ளது. 

ஒரு நாள் CLINIC நடாத்துவதற்கு சுமார் ரூபா 16,000.00 செலவு ஏற்படுகின்றது. வைத்திய ஆலோசகர்களுக்கும் தொழில்நுட்பவியலாளர் களுக்குமான போக்குவரத்து மற்றும் அடிப்படை மருத்துவப் பொருட்களுக்கும் மட்டுமே இந்த பணம் தேவைப்படுகின்றது. 

ஆலோசனை பெற விரும்புபவர்கள் தங்களது பெயர்களை முன் பதிவு செய்து கொள்ளலாம். அடுத்து வரும் தினத்தில் பதிவு செய்தவர்கள் அழைக்கப்படுவார்கள்.

Registration & Reservation 
Please Contact; 
SAS Hospital 
Kilinochchi 
Dr.R.K.Lingham -0772304532 

Last Clinic was on 25/08/2012
Project Value : 16000.00
Project Start : 2012-09-10
Project End : 2020-12-31