ஒரு நாள் உணவு - மஹா தேவா ஆசிரம சிறுவர் இல்லம் - MAHADEVA ACHIRAMA CHILDREN HOMEPosted on: 2011-11-27

ஒரு நாள் உணவு - மஹா தேவா ஆசிரம சிறுவர் இல்லம் 


கிளிநொச்சி ஜெயந்தி நகரில் இயங்கி வரும் மஹா தேவா சிறுவர் இல்லத்தில் உள்ள சுமார் 300 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு ஒரு நாள் உணவினை வழங்கும் திட்டம் 2011 ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

ஆரம்பத்தில் மாதம் ஒரு முறையென ஆரம்பிக்கப்பட்ட போதும் நலன்விரும்பிகளின்  ஆதரவினால் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூட சில மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது. தங்களது குழந்தைகளின் பிறந்த தினத்துக்கும் தங்களது அன்புக்குரியவர்களின் நினைவாகவும் ஒரு நாள் உணவை இவ் இல்லக் குழந்தைகளுக்கு வழங்க புலம் பெயர் உறவுகள் முன்வருவது எமக்கும் அக் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியான விடையமாகும். 

அன்றைய தினம் உதவி வழங்கியவர்கள் பெயரால் பிரார்த்தனையும் வாழ்த்துக்களும் வழங்கப்பட்ட பின்னர் இச் சிறுவர்கள் அன்றைய உணவை உண்பது மனதை நெகிழவைக்கும் செயல். 

குறிப்பு : நீங்களும் இத்திட்டத்தில் பங்கு பற்ற விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ளவும். நீங்கள் விரும்பிய தினத்தில் ஒழுங்கு செய்யப்படும். இல்ல நிர்வாகத்திடம் உறுதிப்பத்திரமும் புகைப்படமும் பெற்று உங்களுக்கு தரப்படும். 

இதுவரை இத்திட்டத்தில் இணைந்து கொண்டவர்கள் :

Project Value : 43000.00
Project Start : 2011-11-27
Project End : 2020-12-31