தென்னங்கீற்று 2016Posted on: 2016-04-17

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தனது வருடாந்த கலைநிகழ்வான “தென்னங்கீற்று 2016″ இணை இவ்வாண்டு பிரித்தானிய கொவன்றி மண்ணில் நடாத்தியிருந்தது.

பல்சுவை நிகழ்வாக நடைபெற்ற இன் நிகழ்ச்சியில் கொவன்றி பிரதேச தமிழ் மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். கொவன்றி தமிழ் பாடசாலை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் சுமார் 39 நிகழ்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றன.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் தலைவர் வைத்தியக் கலாநிதி சதானந்தன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்க தலைவர் திரு கந்தையா அரியரத்னம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இன் நிகழ்வினை கிளி மக்கள் அமைப்பின் நிகழ்ச்சி அமைப்புக் குழுவைச் சேர்ந்த திருமதி ஜெயஸ்ரீ சதானந்தன், திருமதி கலையரசி துறைவன், திருமதி விஜயா ரவீந்திரன் மற்றும் திருமதி ஜெயசீலன் ஆகியோர் ஒழுங்குசெய்திருந்தனர்.

Event Date : 2016-04-16