நன் மதிப்பளிப்பு விழா- (A/L - 2012)Posted on: 2013-03-17

நன் மதிப்பளிப்பு விழா- (2012)

கடந்த 2012 ம் ஆண்டு நடைபெற்ற கா. பொ. த. உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா கடந்த 14/03/2013 அன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் முன்னிலையில் கணித, விஞ்ஞான, கலைப் பிரிவுகளில் தலா பத்து மாணவர்களும் வணிகப் பிரிவில் பதினைந்து மாணவர்களும் நன் மதிப்பளிக்கப்பட்டனர்.

மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக KILI PEOPLE நிறுவனம் Kilinochchi Education Development Trust (KEDT) நிறுவனத்துடன் இணைந்து இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. 

மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடனும் கடும் முயற்சியால் சாதனை படைத்த இவ் மாணவர்களுக்கு KILI PEOPLE வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.

Event Date : 2013-03-14